Cinema
“இப்ப நான் வேறடா.. கிட்ட வந்து பாருடா..” : வெளியானது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ டீசர்!
இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து சுதா கொங்கரா இயக்கியுள்ள படம் ‘சூரரைப் போற்று’.
‘காப்பான்’ படத்துக்குப் பிறகு சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராஃப், கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Also Read: நேருக்கு நேர் மோதுகிறது விஜய் - சூர்யா படங்கள்? : மாஸ்டர், சூரரைப் போற்று ரிலீஸ் தேதி வெளியானது!
சிக்யா என்ற நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள ‘சூரரைப் போற்று’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில் போஸ்டர்கள், மாரா தீம் ஆகியவை ரசிகர்களை கவர்ந்ததால் படத்தின் ரிலீஸுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ள சூரரைப் போற்று படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு வெறித்தனமான கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருப்பது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இதற்கிடையே, சூரரைப் போற்று டீசர் வெளியானதையொட்டி ட்விட்டரில் #SooraraiPottruTeaser என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி தேசிய அளவில் முன்னிலை வகிக்கிறது.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?