Cinema
விஜயின் ‘மாஸ்டர்’ படமும் காப்பியா? இந்த கதை யாருடையது? தொடங்கியது சர்ச்சை!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதல் முறையாக விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை மிகப்பெரிய உற்சாகத்தில் ஆழ்த்தியது.
எக்ஸ் பி ஃபிலிம்ஸ் கிரியேட்டர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா என பலர் நடித்து வருகின்றனர்.
படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் ஜனவரி 16ம் தேதி விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் படக்குழு தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், எப்போதும் போல விஜய் படத்துக்கு எழும் கதை திருட்டு சர்ச்சைகள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலான மாஸ்டர் படத்துக்கும் எழுந்துள்ளது.
அந்த வகையில் Silenced என்ற கொரியன் படத்தின் ரீமேக் கதையே விஜயின் மாஸ்டர் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள மாஸ்டர் படக்குழு, இது லோகேஷ் கனகராஜின் கற்பனையில் உருவான கதை மட்டுமே; எந்த படக்கதையின் ரீமேக்கும் இல்லை என தெரிவித்துள்ளது.
ட்ரெய்லர் வெளியானால் தான் தெரியும் எத்தனை பேர் கதைக்கு சொந்தம் கொண்டாடி வழக்கு தொடர்வார்கள் என்று. பொறுத்திருந்து பார்ப்போம்.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!