Cinema
விஜய் 65 : தயாரிப்பு நிறுவனம் தயார்... லோகேஷ் கனகராஜ், மகிழ் திருமேனி இருவரில் இயக்கப்போவது யார் ?
மாநகரம், கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 64வது படத்தில் நடித்து வருகிறது. சென்னை, டெல்லி என படபிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் கர்நாடகாவின் ஷிமோகாவில் தற்போது படத்தின் ஷூட்டிங் வேலைகள் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து, விஜயின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், வெற்றிமாறனோ தாணு தயாரிப்பில் சூர்யாவின் 40 வது படத்தை இயக்கவுள்ளதாக அண்மையில் செய்தி வெளியானது.
ஆகவே விஜய்-வெற்றிமாறன் படத்தின் வேலைகள் தள்ளிப்போனதாக தெரிகிறது. இந்நிலையில், சர்கார் படத்துக்கு பிறகு மீண்டும் விஜயை வைத்து படம் தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விரைவில் விஜய் - சன் பிக்சர்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகக் கூடும் என்வும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே விஜய் 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என கூறப்படுகிறது.
இதுவரை விஜய் 65 இயக்குநர் குறித்து தகவல்கள் எதுவும் உறுதியாக நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஜய் 64க்கு பிறகு அவரது 65வது படத்தையும் லோகேஷ் கனகராஜே இயக்கவுள்ளார் என முன்பே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் தடம் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி விஜய் 65 படத்தை இயக்குவார் எனவும் கோலிவுட் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.
Also Read
-
கச்சத்தீவு விவகாரம் : “இலங்கை அதிபரின் பேச்சு, இருநாட்டு உறவுக்கு எதிரானது” - CPI முத்தரசன் கண்டனம்!
-
முதலமைச்சரின் ஜெர்மனி பயணம் மூலம் ரூ.7020 கோடி முதலீடு... 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி !
-
மூப்பனாரை பிரதமராக்க முயன்றவர் கலைஞர்.... திடீரென்று தமிழ் வேடம் போட்ட நிர்மலா - முரசொலி விமர்சனம் !
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !