Cinema
3வது முறையாக இணைகிறது சிவா - கேஜேஆர் கூட்டணி? - விக்னேஷ் சிவன் படத்தின் புது அப்டேட்!
நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனை வைத்து ஒரு இயக்க திட்டமிட்டிருந்தார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.
தற்போது பட்ஜெட்டை காரணம் காட்டி அந்நிறுவனம் விலகியுள்ளது. ஜூலை மாதமே தொடங்கவிருந்த சிவகார்த்திகேயன் விக்னேஷ் சிவன் படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்காததால் தள்ளிப்போனது.
தற்போது ஹீரோ பட ரிலீசுக்காக காத்திருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்தபடியாக நெல்சன் இயக்கத்திலான டாக்டர் படத்தின் படபிடிப்பில் இணைந்துள்ளார்.
இதற்கிடையில், விக்னேஷ் சிவனுடனான படத்துக்கு தயாரிப்பாளர் கிடைத்தவுடன் அடுத்தகட்ட நகர்வு குறித்த வேலைகளை தொடங்கலாம் என சிவகார்த்திகேயன் கூறியுள்ளாராம்.
இந்நிலையில், காதல் கதையாக உருவாகவுள்ள இந்த படத்தை தயாரிக்க கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் முன்வந்துள்ளதாகவும், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரிடமும் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக வருகிற டிச.,20ம் தேதி ரிலீசாகவுள்ள சிவகார்த்திகேயனின் ஹீரோ படமும், படபிடிப்பில் உள்ள டாக்டர் படமும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தான் தயாரிக்கிறது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!