Cinema
மூக்குத்தி அம்மன் தள்ளிவைப்பு? அடுத்து மீண்டும் இன்னொரு படத்தில் நயன்தாரா - ஆர்.ஜே பாலாஜி கூட்டணி
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா ஆர்.ஜே.பாலாஜியுடன் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடிக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது.
LKG படத்தை அடுத்து இந்த படத்தையும் ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. நடிப்பது மட்டுமல்லாமல் மூக்குத்தி அம்மன் படத்தில் கதை திரைக்கதை எழுதி, சரவணன் உடன் இணைந்து இயக்கவும் செய்யவுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.
2020ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் படபிடிப்பில் நயன்தாராவும் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நயன்தாராவும், ஆர்.ஜே.பாலாஜியும் இணைந்து மற்றுமொரு படத்தில் நடிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. நயன்தாராவின் காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் தயாரிக்க இருக்கும் இந்த படம் போலிஸ் கதைக்களத்தில் உருவாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி வரும் ’நெற்றிக்கண்’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஒரே மாதத்தில் 46,122 தெருநாய்களுக்கு தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தகவல்! - முழு விவரம் உள்ளே!
-
“இளையராஜா மீது முதலமைச்சர் பாசம் வைத்ததற்கு இதுதான் காரணம்...” - முரசொலி தலையங்கம் நெகிழ்ச்சி!
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!