Cinema
“எப்போடா கண்ணு வர?” - சந்தானம் நடிக்கும் டகால்டி பட டீசர் ரிலீசானது! (video)
பிரமாண்ட இயக்குநரான ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த விஜய் ஆனந்தின் இயக்க்தில் சந்தானம் நடிக்கும் படம் டகால்டி.
இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக மேற்கு வங்க நடிகை ரித்திகா சென் நடிக்கிறார். காமெடியில் சந்தானத்துக்கு மேலும் பலம் சேர்ப்பதற்காக யோகி பாபுவும் இந்த படத்தில் நடிக்கிறார்.
ஆக்ஷன் காமெடி பாணியில் உருவாகி வரும் டகால்டி படம் நவம்பர் மாதமே திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டருக்கு பிறகு எந்த தகவலும் இல்லாமல் இருந்தது.
இவ்வாறு இருக்கையில், இன்று (டிச.,01) மாலை 5 மணிக்கு டகால்டி படத்தின் டீசர் வெளியாகும் என கடந்த 29ம் தேதி சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அதன் பிறகு சந்தானத்தின் ரசிகர்கள் #DagaaltyTeaserFrom1stDec என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.
இந்நிலையில், டகால்டி பட டீசர் வெளியாகும் நேரம் மாற்றப்பட்டுள்ளது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சந்தானம் “ரசிகர்களை காக்க வைக்க டகால்டி படக்குழு விரும்பாததால் படத்தின் டீசர் இன்று (டிச.,01) மாலை 4.15 மணிக்கே வெளியாகும்” என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, யூடியூபில் ரிலீசானது சந்தானத்தின் டகால்டி பட டீசர். படம் எப்போது ரிலீசாகும் என ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த ரசிகர்களுக்கு டிசம்பர் மாதம் வெளியிடுவதாக டீசரில் குறிப்பிட்டுள்ள படக்குழு தேதியை அறிவிக்கவில்லை.
Also Read
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!