Cinema
உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘சைக்கோ’ படத்தின் ‘உன்ன நெனச்சு...’ பாடலுக்கு பிரபலங்கள் பாராட்டு #ViralSong
வாட்ச்மேன் படத்துக்கு பிறகு டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிக்கும் படம் ‘சைக்கோ’. மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அதிதி ராவ், நித்யா மேனன், ராம், சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மிஷ்கினின் ‘நந்தலாலா’, ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகிய படங்களுக்குப் பிறகு ‘சைக்கோ’ படத்துக்கு இசையமைக்கிறார் இசைஞானி இளையராஜா. மிஷ்கினுடன் முதன்முறையாக கைகோர்த்திருக்கும் உதயநிதி, இந்தப் படத்தில் பார்வையற்றவராக நடிக்கிறார். இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்கான ‘உன்ன நெனச்சு’ என்ற பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடியிருக்கிறார். இளையராஜாவின் இசையில் அவர் பாடியுள்ள முதல் பாடலும் இதுதான்.
பாடலாசிரியர் கபிலன் எழுதியிருக்கும் இந்தப் பாடலை சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் இயக்குநர் வெற்றிமாறன். இந்தப் பாடலுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. பாடலை கௌதம் மேனன், யுவன் ஷங்கர் ராஜா உள்பட பலர் பாராட்டியுள்ளனர். டிசம்பர் 27-ம் தேதி ‘சைக்கோ’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அடுத்து சிபிராஜ் நடிப்பில் மாயோன் என்ற படத்தை தயாரிக்கிறது.
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!