Cinema
அப்போ ரஜினி.. இப்போ விஜய்.. அடுத்து கமல்.. : ‘இந்தியன் 2’ல் விஜய் சேதுபதி வில்லன்? - படக்குழு விளக்கம்!
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், வித்யுத் ஜம்வால், விவேக், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் நடிப்பில் உருவாகி வருகிறது 'இந்தியன் 2' படம்.
அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை பிரமாண்ட பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் விஜய் சேதுபதி இந்தியன் 2ல் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலான விஜய் 64 படத்தில் வில்லனாக நடிக்கிறார். தொடர்ந்து ஸ்டார் ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதி கமலின் இந்தியன் 2ல் இணைந்துள்ளதாக வந்த செய்தியால் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில், இந்தியன் 2 படத்தில் விஜய் சேதுபதி வில்லன் ரோலில் நடிக்கவுள்ளார் என்பது தொடர்பாக வெளியான செய்திகளுக்கு படக்குழு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில், “இந்தியன் 2 படத்தில் நடிப்பவர்கள் தொடர்பான அறிவிப்பே இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் உள்ளது”.
“அதற்குள் விஜய் சேதுபதி வில்லனாக கமிட் ஆகியுள்ளார் என செய்திகள் பரவுகின்றன. கமல் 60 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியது என்னவோ உண்மைதான். ஆனால், அதற்கு பிறகோ அதற்கு முன்போ இந்தியன் 2ல் நடிப்பதற்காக விஜய் சேதுபதியை அணுகவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்தியன் 2 படத்தில் தான் நடிக்கவில்லை என்றும், அது தொடர்பாக வெளியாகும் செய்திகள் உண்மையில்லை என்றும் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !