Cinema
கார்த்தி - ஜோதிகாவின் 'தம்பி' ஆடியோ ரிலீஸ் எப்போது? - படக்குழு அறிவிப்பு!
‘கைதி’ படத்துக்குப் பிறகு கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தம்பி’. இதனை த்ரிஷ்யம் புகழ் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். சத்யராஜ், ஜோதிகா, சீதா, செளகார் ஜானகி என பலர் நடித்திருக்கும் இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் ஆவலை அதிகரிக்கச் செய்துள்ளது.
ஜீத்து ஜோசப்பின் வழக்கமான த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் கார்த்தியும், ஜோதிகாவும் அக்கா தம்பியாக நடித்துள்ளனர். மேலும், கார்த்திக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.
டிசம்பர் 20ம் தேதி ‘தம்பி’ ரிலீசாகும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 30ம் தேதி நடைபெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்துக்கு ‘96’ படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க ரொமான்ஸ், காதல் என உருவாகியிருந்த ‘96’ படத்தில் இசையமைத்திருந்த கோவிந்த் வசந்தா, த்ரில்லர், ஆக்ஷன் நிறைந்ததாக உருவாகியுள்ள ‘தம்பி’ படத்தில் மாறுபட்ட இசையமைப்பில் அசத்தியிருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Also Read
-
துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
சென்னையில் எப்போது மழை நிற்கும்? : வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
-
”மாற்றுத்திறனாளிகளின் ஒளிமயமான வாழ்வுக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!