Cinema
"ரஜினியும், கமலும் இதில் எனக்கு ஜூனியர்கள்தான்” - டி.ராஜேந்தர் பேட்டி!
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்று சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர்.
அப்போது பேசிய அவர், “என்னை வாழ வைத்த துறை இந்த சினிமாதான். எனக்கு பெயர், பெருமை என அனைத்தையும் கொடுத்த சினிமா இன்று நலிந்தும், சின்னாபின்னமாகியும் வருகிறது. எதிர்காலத்தில் என்னவாகுமோ எனத் தெரியவில்லை.
நண்பர்கள் வற்புறுத்தியதால் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் போட்டியிட சம்மதித்துள்ளேன். சினிமா விநியோகஸ்தர்கள் தேர்தலில் மாற்றம் வரவேண்டும். அப்போதுதான் தமிழகம் முழுவதும் சினிமா விநியோகம் சிறப்பாக இருக்கும்.
நவம்பர் 21ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட உள்ளேன். இந்த சினிமா துறை நிலைத்து நிற்க யாரை வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய டி.ராஜேந்தர், “சினிமாவுக்கு வேண்டுமானால் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்குப் பிறகு நான் வந்திருக்கலாம். ஆனால் அரசியலில் நான் சீனியர். அவர்களின் அரசியல் வருகை குறித்து நான் கருத்துக் கூற விரும்பவில்லை. அரசியலில் வெற்றி பெற அனுபவம் மட்டும் போதாது அதிர்ஷ்டமும் வேண்டும்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!
-
3.5 லட்ச அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!
-
ஒன்றிய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: இரகுமான் கான் நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் சூளுரை!