Cinema
‘People Choice’ விருதுகளை தட்டிச் சென்ற மார்வெலின் அயர்ன் மேன், ஸ்பைடர்மேன்!
1975ல் இருந்து ஹாலிவுட் திரைத்துரையி்ல் அறிவிக்கப்பட்டு வரும் ஒரு விருதுதான் ‘People’s Choice'. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாத தொடக்கத்தில் இந்த விருதுக்கான வாக்கெடுப்பு மக்களிடம் நடத்தப்படுவது வழக்கம். அந்த ஆண்டில் வெளியான படங்களில் தேர்வால் சில படங்கள் சிறந்த படம், சிறந்த காமெடி படம், சிறந்த ஆக்ஷன் படம், ட்ராமா படம், ஃபேமிலி படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட விருதுகள் அறிவிக்கப்படும்.
அந்த வரிசையி்ல் இப்போது, 2019ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில், இந்த ஆண்டுக்கான சிறந்த படமாக உலகளவில் அதிக வசூல் செய்த படங்களின் வரிசையிள் முதல் இடத்தில் இருக்கும் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ தேர்வாகியிருக்கிறது. மேலும் இந்த படத்துக்கு சிறந்த ஆக்ஷன் படத்துக்கான விருதும், அயர்ன் மேனா நடித்த ராபர்ட் ஜே டோவ்னிக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது.
மேலும், ‘Spider-Man: Far From Home’ படத்துக்காக நடிகர் Tom Holland சிறந்த ஆக்ஷன் நடிக்கராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், இந்த ஸ்பைடெர் மேன் படத்தில் டாம் ஹாலண்ட்க்கு ஜோடியாக நடித்திருந்த Zendaya சிறந்த நடிகைக்கான விருதை தனதாக்கியுள்ளார்.
இப்படி People’s Choice-ன் 2019ஆம் ஆண்டுக்கான விருதுகளில் பெரும்பாலும் மார்வெல் நிறுவனத்தின் படங்களுக்கே அறிவிக்கப்பட்டிருப்பது அந்நிறுவனத்துக்கு பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேச்சமயம், மார்வெல் ரசிகர்களிடையே எந்த அளவுக்கு தங்களுடைய படைப்புகள் கொண்டுப்போய் சேர்ந்துள்ளதையும் தெளிவா விளக்கியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!