Cinema
நடிகர் சங்கத்திற்க்கு சிறப்பு அதிகாரி நியமனம் : வழக்கு தொடுக்க பாண்டவர் அணியினர் முடிவு!
சென்னை வடபழனி பிரசாத் லேப்பில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்ட பாண்டவர் அணியை சேர்ந்த நடிகர்கள் நாசர், கார்த்தி, உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடைப்பெற்ற அனைத்து செயல்களும் சட்டப்படி தான் நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
3222 பேர் மட்டுமே இருக்கும் அமைப்பில் 4 பேர் கொடுத்த புகாரில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது. நடிகர் ராதா ரவியின் சகோதரரும் புகார் அளித்துள்ளார். 4 பேர் கொடுத்த புகாரில், 3200 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் என்ன நியாயம் இருக்கிறது.
நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு அறக்கட்டளை மூலமாக தொடர்ச்சியாக பென்சன் வழங்கப்பட்டு வருவதாக கூறிய அவர்கள், நிர்வாகத்தினரிடம் அளிக்காத பென்சன் மனுவிற்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டது ஏற்க முடியாது என தெரிவித்த அவர்கள் சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் கூறினர்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!