Cinema
தீபாவளி ரிலீஸில் அதிர வைத்த கைதி, பிகில் : வசூலில் யார் முதலிடம் - வெளியான இரண்டாவது வார ரிப்போர்ட் !
இந்த வருட தீபாவளி ரிலீசாக ரசிகர்களுக்கு க்ரைம் த்ரில்லர் மற்றும் கமர்சியல் என இரண்டு விதமாக ஆச்சர்யத்தைக் கொடுத்துள்ளது தமிழ் சினிமா படங்களான கைதி மற்றும் பிகில் திரைப்படங்கள்.
அட்லி இயக்கத்தில் விஜய் 3வது முறையாக நடித்துள்ள படம் ’பிகில்’. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் தமிழகமெங்கும் சுமார் 630 தியேட்டர்களில் வெளியானது. இன்றைய நிலவரப்படி இரண்டாவது வாரமாக 530 தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
சுமார் 163 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் தற்போது வரை 119 கோடி ரூபாய் கிராஸ் கலெக்ஷன் ஆகியிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர் வரும் நாட்களில் 260 கோடி வரை வசூல் சாதனை படைக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், வெறும் 27 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - கார்த்தி கூட்டணியில் உருவான ’கைதி’ படம் இதுவரையில் தமிழகத்தில் மட்டும் 34 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஆந்திரா, கேரளா என உலகமெங்கும் வெளியான இரண்டு வாரத்தில் 83 கோடி ரூபாய் வரை கைதி படம் வசூலித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சேட்டிலைட், டிஜிட்டல் உரிமை மற்றும் இந்தி டப்பிங் உரிமை ஆகியவற்றுக்கும் கைதி படம் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே 27 கோடிக்கு எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்துக்கு நிகர லாபமாக 17 கோடி ரூபாய் தயாரிப்பாளருக்கு இந்த படம் பெற்றுத் தந்துள்ளது.
கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் 2019ம் ஆண்டின் ஆகப்பெரும் வசூல் சாதனை படைத்த படம் என்ற பெருமையை நிச்சயம் விஜயின் பிகில் படம் பிடிக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகிறது.
Also Read
-
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !
-
”பிரதமர் மோடி பேசியது அபாண்டமானது; பேசக்கூடாதது” : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன... முழு விவரம் உள்ளே !
-
”ஓராண்டில் 15,500 பேர் மலையேற்றம்” : சுற்றுலாத்துறையில் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு!
-
கல்லறைத் தோட்டங்கள் - கபர்ஸ்தான்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆணை என்ன?