Cinema
ஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கப்போவது அட்லியா? வெற்றிமாறனா? - ஆர்வத்தில் ரசிகர்கள்!
ஜீரோ படம் தோல்வியைச் சந்தித்த நிலையில் அடுத்து எந்தப் படத்தில் நடிப்பது என்பது குறித்த எந்த தகவலையும் வெளியிடாமல் உள்ளார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.
விஜய்யின் ‘பிகில்’ படத்தைப் பார்த்த ஷாருக்கான் அட்லி இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், மெர்சல் படம் வெளியான சமயத்திலேயெ இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
அப்போது பிகில் அல்லது மெர்சல் படத்தின் ரீமேக் படம் பண்ணலாம் என ஷாருக் தெரிவிக்க, நேரடி படமே பண்ணலாம் என அட்லி கூறியதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே, அட்லி - ஷாருக் கூட்டணியில் புது படம் உருவாக உள்ளது என்றும் அதற்கு Sanki என பெயரிடப்பட்டதாகவும் தகவல் வெளியானது. மேலும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஷாருக்கானின் பிறந்தநாளான நவ.,2ம் தேதி தெரிவிக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், நேற்று (நவ.,02) தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நடிகர் ஷாருக்கான், சினிமா உலகில் தனக்கு நெருங்கிய வட்டாரங்களை மட்டும் அழைத்துள்ளார். அதில் இயக்குநர் அட்லி மற்றும் அவரது மனைவி ப்ரியா, இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அசுரன் படத்தை பார்த்த ஷாருக்கான் அதன் இந்தி ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், வெற்றிமாறனோ நடிகர் சூரியை வைத்து படம் இயக்கி வருகிறார்.
ஆகையால், ஷாருக்கானின் அடுத்த படம் இயக்குநர் வெற்றிமாறன் அல்லது அட்லி ஆகிய இருவரில் ஒருவருடனாகத்தான் இருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Also Read
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!