Cinema

ரஜினியின் தர்பார் படத்தை வாங்க கன்னட விநியோகஸ்தர்கள் மறுப்பு: இது தான் காரணமாம்...

ரஜினிகாந்த் நடிப்பில் முதல் முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிரும் படம் தர்பார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். கூடவே யோகி பாபுவும் நடித்துள்ளார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. பேட்ட படத்தை அடுத்து இந்த படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார். வருகிற 7ம் தேதி தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரும், தீம் மியூசிக்கையும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையில், படத்தின் வியாபார பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமானது என்னவென்றால் தர்பார் படத்தின் வியாபாரம் தொடங்கும் போதே சிக்கலையும் கொண்டு வந்துள்ளது.

அது என்னவெனில், ரஜினிக்கு என்னதான் கர்நாடகாவில் மவுசு இருந்தாலும் சமீப காலங்களாக அவரது படத்துக்கான வரவேற்பு சற்று சரிவையே சந்தித்துள்ளது. உதாரணமாக கடந்த முறை கர்நாடகாவில் பேட்ட படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் ஒருவருக்கு 4 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால் மற்ற விநியோகஸ்தர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டுமல்லாமல், கர்நாடகாவில் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களுக்கு பிறகே தமிழ் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வருகிற பொங்கலுக்கு மகேஷ்பாபு, அல்லு அர்ஜூனின் படங்களும் திரைக்கு வரவுள்ளதை அடுத்து ரஜினியின் தர்பார் படத்தை வாங்கி நஷ்டம் ஏற்படுத்திக் கொள்ள விநியோகஸ்தர்கள் விரும்பவில்லை என கூறப்படுகிறது.