Cinema
“ரஜினிக்கு சிறப்பு விருது” : கோவா திரைப்பட விழாவில் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு!
திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிகாந்த்துக்கு Icon of Golden Jubilee என்ற விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்தத் தகவலை மத்திய செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று அறிவித்தார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் பொன்விழா ஆண்டை ஒட்டி இந்தச் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்த்துக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.
இந்திய திரையுலகின் ஜாம்பவானாகத் திகழும் ரஜினிகாந்த்துக்கு சிறப்பு மிக்க இந்த விருது அறிவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, திரைத்துறையினரும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவின் பொன்விழாவில் எனக்கு வழங்கப்படும் இந்த மதிப்புமிக்க மரியாதைக்காக இந்திய அரசுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு !
-
தீபாவளி பண்டிகை : தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட 20,378 பேருந்துகள் இயக்க முடிவு !
-
BB SEASON 9 : "ஒரு நாள் மேல தாங்க மாட்டாரு?" - Watermelon திவாகரை டார்கெட் செய்யும் சக போட்டியாளர்கள்!
-
"தலைமை நீதிபதி மீதான தாக்குதல் சமூகத்தின் ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறது" - முதலமைச்சர் கண்டனம் !
-
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நோக்கி செருப்பு வீச்சு... பின்னணியில் சனாதனம் - முழு விவரம் உள்ளே !