Cinema
இந்த முறையாவது சொன்னபடி பாயுமா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’? - ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் முதன்முறையாக உருவாகியுள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. ஆக்ஷன், ரொமான்ஸ் கலந்த கதையமைப்பில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய இப்படத்தின் பணிகள் முடிவடைந்து ஓராண்டுக்கு முன்பே ரிலீசாக தயாராக இருந்தது. பல்வேறு பிரச்னைகள் காரணமாக படம் ரிலீஸாவதில் சிக்கல்கள் நீடித்து வந்தது.
கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட பிறகு செப்.,6ம் தேதி எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தந்தாலும் வழக்கம்போல் ரிலீஸ் தள்ளிப்போனது.
இந்த நிலையில், வருகிற நவம்பர் 29ம் தேதி தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, படத்தின் பாடல்கள் அனைத்தும் இளைஞர்களை ஈர்த்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
தீராத எதிர்பார்ப்பை அடுத்து படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.
Also Read
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!