Cinema
‘சொந்த வாழ்க்கையில் பிரச்னை’- பிரபல ஹாலிவுட் நடிகரை படத்தில் இருந்து நீக்கியது வால்ட் டிஸ்னி நிறுவனம்!
ஒரு படத்தின் பெயரை சொன்னதும் அதில் நடித்த நடிகர்கள் நினைவுக்கு வந்தால் அது அந்த படத்தின் வெற்றி. அதே ஒரு கதாப்பத்திரத்தின் பெயரை சொன்னதும் அந்த படமும் அந்த நாயகனும் நினைவுக்கு வந்தால் அது தான் ஒரு நடிகனின் வெற்றி அப்படியான ஒரு நடிகர் தான் johnny depp.
இவரின் சொந்த பெயரைக்காட்டிலும் இவர் ஏற்று நடித்த ஜாக்ஸ் ஸ்பாரோ கேரக்டர் தான் இவரின் அடையாளம். அப்படிப்பட்ட ஒரு கதாப்பாத்திரத்தை ஜானி டிப்பிடம் இருந்து பறித்துள்ளது டிஸ்னி நிறுவனம்.
கேப்டன் ஜாக்ஸ் ஸ்பாரோவின் அதிரடியான நகைச்சுவை பயணமாக இருந்து வந்த படங்கள்தான் ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்’ சீரிஸ். இதுவரை 5 பாகங்கள் வெளியாகி ஐந்துமே சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளது. இதன் 6வது பாகத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் டிஸ்னியும் 6வது பாகத்துக்கான அறிப்பை வெளியிட்டுள்ளது.
இதை ரசிகர்கள் கொண்டாவதற்குள்ளாக ஒரு அதிர்ச்சி தகவலையும் கூடவே அறிவித்துள்ளது டிஸ்னி. அது என்னவென்றால் 6வது பாகமாக உருவாகவிருக்கும் இது பைரேட்ஸ் ஆஃப் கரிபியனின் Spin or version என்பதால் இதில் ஜானி டிப்க்கு பதிலாக ஒரு பிரபல ஹாலிவுட் நடிகையை முன்னணி கதாபாத்திரத்தில் கதையை கொண்டு செல்ல போவதாக கூறியுள்ளது.
Pirate Red எனும் பெயரில் இந்த ஸ்பின் ஆஃப் வெர்ஷனில் ட்ராவல் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிஸ்னியின் இந்த மோசமான அதிரடி முடிவுக்கு ஜானி டிப்பின் சொந்த வாழ்க்கை பிரச்னைகளே காரணம் என ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!