Cinema
பிகில்: படம் வெளியான நாளிலேயே திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் - விஜய் ரசிகர்கள் கவலை
விஜய்-அட்லி கூட்டணியில் 3வது முறையாக உருவாகியுள்ள பிகில் படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியானது. நயன்தாரா, இந்துஜா, விவேக், கதிர், ஆனந்த் ராஜ், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாகி, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
சுமார் 180 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மெர்சலுக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
சிக்கல், சர்ச்சை, குளறுபடி, விமர்சனங்கள் என பலவற்றாலும் பேசப்பட்ட பிகில் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. இருப்பினும், பிகில் படத்தை அட்லி கையாண்ட விதம் குறித்து விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட பலரால் பல விதமாக இது வரை விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், படம் வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் சட்டவிரோத இணையதளத்தில் பிகில் படம் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுமட்டுமல்லாமல், தமிழ் ராக்கர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் பிகில் படம் அதன் இணையதளத்தில் வெளியான லிங்க் உடன் ஏ.ஜி.எஸ் கிரியேட்டிவ் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தியையும் டேக் செய்து பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் முழுப்படமும் பேஸ்புக் இணையதளத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
ரூ.24.30 கோடியில் ‘கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
தஞ்சாவூர் - தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ‘மாபெரும் சோழர் அருங்காட்சியகம்’!: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்!
-
ஒரே தவணையில் ரூ.5 ஆயிரம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை… முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க திரண்ட பெண்கள்!
-
“தமிழ்நாட்டின் நிரந்தர டிரெண்ட் Black and Red தான் ; 2.0 ஸ்டார்ட்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
விவசாயிகளின் உரிமைக்கான ”அரிசி” படம் நிச்சயம் வெல்லும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!