Cinema
#AskAtlee நிகழ்ச்சியில் நடிகர் அஜித் குறித்து இயக்குநர் அட்லீ அசத்தல் பதில் !
மெர்சல், தெறி படங்களை அடுத்து அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கதிர், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
காலை சிறப்பு காட்சிகளுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் பிகில் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. பிகில் திரைப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், நேற்றைய தினம் #AskAtlee என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் எழுப்பும் கேள்விக்கு இயக்குநர் அட்லீ பதில் அளிப்பார் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ட்விட்டரில் நடிகர் விஜய், அஜித் என அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் அட்லீயிடம் பல கேள்விகளைக் கேட்டனர்.
அப்போது, ரசிகர் ஒருவர் நடிகர் அஜித் பற்றி ஒரு வார்த்தையில் பதில் கூறுங்கள் என்று கேள்வி எழுப்பினார். அவரின் இந்த கேள்விக்கு உடனடியாக பதில் அளித்த அட்லீ, “அஜித் சார் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவரின் விஸ்வாசம், நேர்கொண்டபார்வை படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று கூறினார். அவரின் இந்த பதிலுக்கு அஜித் ரசிகர்கள் பலர் வரவேற்றும், பிகில் படம் வெற்றியடைய வாழ்த்துக்களும் கூறினார்கள்.
மேலும், மற்றொரு கேள்விக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பணியை நேசிப்பதாகவும், கைதி படத்திற்கு வாழ்த்துக்களும் தெரிவித்தார்.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !