Cinema
வழக்கமான தெலுங்கு ஹீரோ ‘பாகுபலி’யானது இப்படித்தான்! - பிரபாஸ் பிறந்ததின சிறப்புப் பகிர்வு!
பிரபாஸ் என்னும் நடிகருக்கு இப்போது இருக்கும் அடையாளம் வேறு. ஆனால் பாகுபலிக்கு முன் தெலுங்கு சினிமாவின் எந்த இலக்கணத்தையும் மீறாத ஒரு மாஸ் நாயகனாக வலம் வந்தவர் பிரபாஸ். 'மிர்ச்சி' படத்தில் வில்லன்கள் வரிசையாக நிற்க எல்லோரையும் தான் எப்படி அடிக்கப் போகிறேன் என வாயாலேயே சொல்லிவிட்டு "But இப்போ நான் லவ் மூட் ல இருக்கேன்" என்பார். வில்லன்களும் பயந்து போய்விடுவார்கள். அப்படி இருந்த அச்சு அசல் தெலுங்கு ஹீரோ இன்று இந்தியாவின் மிக முக்கிய நாயகனாக வளர்ந்து வந்த பயணத்தை கொஞ்சம் ரீகேப் செய்யலாம். முதலில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிரபாஸின் தந்தை தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருந்த Yu.சூர்யா நாராயணராஜு. அப்பா, பெரியப்பா என ஒரு பெரிய சினிமா பின்புலத்திலிருந்து தான் வந்தார் பிரபாஸ். 2002-ஆம் ஆண்டு ஈஸ்வர் என்னும் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானாலும் 2004-ம் ஆண்டில் வெளிவந்த வர்ஷம் திரைப்படம் தான் ஒரு பெரிய ரசிகர் வட்டத்தை பெற்றுத் தந்தது.
தொடர்ந்து 2005-ஆம் ஆண்டு வெளிவந்த சத்ரபதி திரைப்படம் பெரிய அளவில் வெற்றிபெற்று, தெலுங்கு திரையுலகில் ஒரு முக்கிய நட்சத்திரமானார். பின் முன்னா, ரஜினி ரசிகராக நடித்த புஜ்ஜிக்காடு, பில்லா தெலுங்கு ரீமேக் என தொடர்ந்து பக்கா மசாலா படங்கள், அனைத்தும் நல்ல ஹிட். அடுத்து அதே பார்முலாவில் வந்த டார்லிங், Mr.Perfect, மிர்ச்சி எல்லாமே பிரபாஸை தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமாக மாற்றியது.
இதையெல்லாம் கடந்து, பின்தான் அந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சம்பவம் நிகழ்ந்தது. ராஜமௌலி தன் கனவுப்படமான பாகுபலி கதையில் பிரபாஸை ஹீரோவாக்கினார். பாகுபலியின் இரண்டு பாகங்களும் உலக அளவில் ஹிட் அடித்தன. பிரபாஸ் தெலுங்கு நாயகன் என்பதைத் தாண்டி இந்திய நாயகனார்.
ஆனால் கொஞ்சம் உற்றுச் சிந்தித்தால் பாகுபலியாக பிரபாஸ் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு காரணம் வெறும் குடும்ப பின்புலம் அல்ல. மாறாக அத்தனை வருடங்கள் மாஸ் மசாலா சினிமாக்கள் செய்ததன் மூலம் பிரபாஸ் பெற்றிருந்த அந்த ஹீரோ இமேஜ் தான் அவரை பாகுபலியாக ராஜமௌலியை நம்பவைத்தது. பிரபாஸின் நடிப்புதான் நம்மையும் நம்ப வைத்தது. நம்பிக்கைக்குரிய இன்னும் பல சினிமாக்கள் தர அவரை வாழ்த்தலாம்!
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!