Cinema
"மாநாடு படத்தில் சிம்பு நடிப்பார், ஆனால் ஒரு கண்டிஷன்"- உஷா ரஜேந்தர் உறுதியளித்ததால் முடிந்தது பஞ்சாயத்து
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த படம் ‘மாநாடு’. அரசியலை மையமாகக் கொண்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதும் சிம்புவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் பல மாதங்களாகவே படத்துக்கான ஷூட்டிங் வேலைகள் தொடங்கப்படாமல் இருந்தது. திடீரென மாநாடு படம் கைவிடப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். மேலும், மாநாடு படம் வெங்கட் பிரபுவின் இயக்கத்திலேயே வேறு நடிகர்களின் நடிப்பில் உருவாகும் என்றும், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, மாநாடு படம் கைவிடப்பட்டதால் சமீபத்தில் ’மகாமாநாடு’ என்ற படத்தை தானே 125 கோடி செலவில் தயாரித்து 5 மொழிகளில் சிம்புவ் இயக்கி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்த சச்சரவு நீடித்த நிலையில், நிறுத்தப்பட்ட மாநாடு மீண்டும் தொடங்கவிருப்பதாகவும், ”சிம்பு சரியாக படப்பிடிப்பிற்கு வருவதற்கு நான் உத்தரவாதம்” என்று சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் தயாரிப்பு சங்கத்தில் உறுதியளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாநாடு பட விவகாரம் தொடர்பாக கடந்த 15ம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விசாரணை நடந்துள்ளது. அக்கூட்டத்தில், தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், சிவசக்தி பாண்டியன், கே.ராஜன் ஆகியோர் மற்றும் மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும், சிம்புவின் தாயார் உஷாவும் கலந்துகொண்டனர்.
அப்போது சிம்புவின் தாயார், ”காலை 10 மணி முதல் 6 மணி வரை படப்பிடிப்பில் சிம்பு கலந்துகொள்வார். சிம்பு படப்பிடிப்பிற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார்'' எனத் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
சிம்புவின் தாயார் அளித்த உத்திரவாதத்தினை அடுத்து தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் பேசியுள்ளனர். அவரும் ஓகே சொன்னதால் சிம்புவிடம் புதிய ஒப்பந்தம் போடப்பட்டு, மாநாடு படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறுகையில்,” சிம்பு தரப்பிடம் சில கோரிக்கைக்களை முன் வைத்துள்ளோம். அதற்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே படப்பிடிப்பு தொடங்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!