Cinema
கொரியன் பட ரீமேக்கில் அதிரடி ஆக்ஷனை காண்பிக்க எத்தனிக்கும் நயன்தாரா!
கோலிவுட்டின் உச்ச நாயகியான வலம் வரும் நடிகை நயன்தாராவின் நடிப்பில் பிகில், தர்பார் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதனையடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ‘நெற்றிக்கண்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த படத்தை ‘அவள்’ பட இயக்குநர் மிலன் ராவ் இயக்கி வருகிறார்.
த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த படத்திற்கான ஷூட்டிங் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனையடுத்து நடிகர் ராணாவின் தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரியன் படத்தின் ரீமேக் என்று சொல்லப்படும் இந்த படத்தில் நயன்தாரா போலிஸாக நடிக்கவுள்ளார். முன்னதாக இந்த கேரக்டரில் நடிகை கீர்த்தி சுரேஷைதான் ராணா அணுகியுள்ளார். ஆனால் கீர்த்திக்கு கால்ஷீட் பிரச்னை இருந்ததால் படத்தில் நடிக்க அவர் மறுத்திவிட்டதாகவும் பின்னர் நயன்தாராவை ராணா அணுகியதாகவும் கூறப்படுகிறது.
நயன்தாராவுக்கு ஒரிஜினல் வெர்ஷனான கொரியன் படத்தை போட்டு காண்பித்தே ராணா சம்மதம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!