Cinema
கதை திருட்டு விவகாரம்: பிகில் படத்துக்கு தடை கோரி வழக்கு- அட்லீ, ஏ.ஜி.எஸ்-க்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் 3வது முறையாக நடித்து உருவாகியிருக்கும் படம் பிகில். தீபாவளி பண்டிகையையொட்டி ரிலீசாகவிருக்கும் இந்த படத்தில் நயன்தாரா, விவேக், கதிர், டேனியல் பாலாஜி, யோகி பாபு, ஆனந்த் ராஜ், இந்துஜா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கல்பாத்தி எஸ்.அகோரத்தின் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நிலையில், பிகில் படத்தை வெளியிட தடைக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இயக்குநர் செல்வா என்பவர், பிகில் படத்தின் கதை தன்னுடையது என்றும், கால் பந்தாட்டத்தை மையமாக கொண்டு 256 பக்கங்களுடைய கதையை ஏற்கெனவே தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்தும், சில தயாரிப்பு நிறுவனங்களிடம் கதையை சொல்லியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து பிகில் படத்துக்கு தடைக் கோரிய இயக்குநர் செல்வாவின் மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, பிகில் படம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு ஏஜிஎஸ் நிறுவனத்துக்கும், இயக்குநர் அட்லீக்கும் உத்தரவிட்டு விசாரணைக்கு நாளை (அக்.,16) ஒத்திவைத்தார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!