Cinema
கபில் தேவ் பயோ பிக் ஷூட்டிங் நிறைவு : பார்ட்டி வைத்து படக்குழு கொண்டாட்டம்!
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான பயோபிக் ஷூட்டிங் பாலிவுட்டில் முடிவடைந்திருக்கிறது.
1983ல் இந்தியாவுக்கு முதல் உலகக்கோப்பைை வாங்கி கொடுத்த கபில் தேவை இன்றைய தலைமுறையினர் மறந்துவிட்டார்கள். அந்தக் காலகட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் ‘83’ எனும் டைட்டிலில் பயோ பிக் உருவாகி வந்தது. இதில் கபில்தேவாக நடிகர் ரன்வீர் சிங் நடித்திருக்கிறார்.
கபீர் கான் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கான ஷூட்டிங் வேலைகள் முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததை ஒரு பார்ட்டி வைத்தும் படக்குழு கொண்டாடியுள்ளது.
‘83’ திரைப்படம் 2020ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் தமிழ் சினிமா நடிகர் ஜீவாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ரன்வீர். இந்தப் படத்தை பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.
மேலும், ‘ஜெயேஷ்பாய் ஜோர்தார்’ என இந்த படத்துக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. ஒரு குஜராத்தி இளைஞனாக நடிக்கவுள்ளார் ரன்வீர். இதற்கான படப்பிடிப்பு வேலைகளை இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!