Cinema
வெளியானது கார்த்தியின் ‘கைதி’ ட்ரெய்லர் : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கிடையே கடும் போட்டி இருக்குமா?
தேவ் படத்தை தொடர்ந்து மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து முடித்திருக்கும் படம் கைதி.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மிகவிரைவாக நடந்து முடிந்திருக்கிறது. ஒரே இரவில் 4 மணி நேரத்திற்குள் நடக்கும் கதை என்பதால் இந்தப் படத்தில் ஹீரோயின் இல்லை.
மே மாதம் வெளியான கைதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலானதைத் தொடர்ந்து, படத்தின் டீசரையும் படக்குழு வெளியிட்டிருந்தது. போலிஸ் ரோந்து செல்லாத ஒரு நாள் இரவில் நடக்கும் கொலை முயற்சி, அதில் இருந்து கார்த்தி எப்படி தப்பிக்கிறார் என்பது தான் இந்தப் படத்தின் கதை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில், நரேன், யோகிபாபு, பொன்வண்ணன், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் ரிலீஸுக்கான பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இந்தப் படத்திற்கு தற்போது வெளிவந்துள்ள ட்ரெய்லர் மேலும் பலம் சேர்த்துள்ளது.
தீபாவளி அன்று விஜய்யின் பிகில், விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் ஆகிய படங்கள் வெளியாவதால் முதல் மூன்று நாட்கள் வசூலில் எந்த படம் அதிக லாபம் பார்க்கும் என்பதில் கடும் போட்டி நிலவ உள்ளது.
அதற்கு ரசிகர்களை தயார் செய்யும் விதமாகவே படத்தின் ப்ரோமோஷன் வேலைகளையும் கைதி படக்குழு தீவிரப்படுத்தி வருகிறது.
Also Read
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் அதிகரித்த நெல் கொள்முதல்- விவசாயிகளுக்கான திட்டங்களை பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு !
-
தொடர்ந்து வலுவடையும் மோந்தா புயல்... தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு ? கரையை கடக்கும் இடம் என்ன ?
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!