Cinema
அஜித்தின் சால்ட்&பெப்பர் ஹேர் ஸ்டைலுக்கு என்னாச்சு! - புதிய கெட்டப்புடன் எங்கு சென்றிருக்கிறார் தெரியுமா?
டெல்லியில் உள்ள Dr.கர்னிசிங் துப்பாக்கிச் சூடு மையத்தில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றுள்ளார்.
நடிப்பு, கார் ரேஸ், ஆளில்லா விமானம் தயாரிப்பு, போட்டோகிராஃபியை தொடர்ந்து துப்பாக்கிச் சுடுதலில் நாட்டம் செலுத்தி தன்னை மேலும் மெருகேற்றி வருகிறார் நடிகர் அஜித்.
இவருடைய சிறிய அசைவைக் கூட இவரது ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாக்கி வருகின்றனர்.
அந்த வகையில் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவரிடம் அவரது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுத்ததை மிகவும் மகிழ்வுடன் பதிவிட்டு வருகிறார்.
தற்போது, டெல்லியில் துப்பாக்கிச் சூடு மையத்திலும் அஜித்தை சந்தித்த ரசிகர்கள் பலர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
மேலும், அந்த புகைப்படங்களை ட்விட்டர், ஃபேஸ் புக் என அனைத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
கோவையில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்று முன்னேறியுள்ள அஜித், தற்போது தேசிய அளவிலான போட்டியில் அவர் பங்கேற்றதை அடுத்து ரசிகர்களும் பெருமையுடன் பதிவிட்டு வருகின்றனர்.
நேர்கொண்ட பார்வைக்கு பிறகு மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ள நடிகர் அஜித் தனது சால்ட்&பெப்பர் ஹேர் ஸ்டைலில் இருந்து மாறுபட்டு கருப்பு நிற முடிக்கு மாறியுள்ளார்.
வருகிற நவம்பர் மாதத்தில் இருந்து தனது 60வது படத்துக்கான படபிடிப்பு பணிகளில் அஜித் ஈடுபடவுள்ளார். அடுத்த ஆண்டு வெளிவரவுள்ள இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!