Cinema
“இதைப் பற்றிப் பேச கூச்சப்படாதீர்கள்” - பெண்களுக்கு நடிகை வரலட்சுமி அட்வைஸ்!
சென்னை விமான நிலைய வளாகத்தில் விமான நிலைய ஆணையகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று முதல் ஒரு மாதத்திற்கு நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை வரலட்சுமி, பெண்களுக்கு மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார்.
அதில், “பொதுவாக பெண்கள் மார்பக உபாதைகள் குறித்து வெளியே பேச தயங்குவார்கள். மார்பகம் என்பது உடலின் மற்ற உறுப்புகளைப் போன்ற ஓர் அங்கம் தான். அதில் ஏற்படும் பிரச்னைகளை கூச்சப்படாமல் தங்களுடைய தாய், சகோதரிகளிடம் வெளிப்படையாக பேச வேண்டும். மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவேண்டும்.”
“மார்பகம் என்றதுமே அது தொடர்பாக யாரிடமும் பேசிவிடக்கூடாது என்ற மனநிலையிலேயே பெருவாரியான பெண்கள் இருக்கிறார்கள். ஆண்களுக்கு எப்படி உடலில் சில உறுப்புகள் உள்ளதோ அது போலவே பெண்களுக்கும் மார்பகம்.”
“சென்னை விமான நிலையத்தில் இந்த மார்பக புற்றுநோய் நிகழ்ச்சி ஒரு மாதத்திற்கு நடக்கும், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் மார்பக புற்றுநோய் குறித்து அறிந்துகொள்ளலாம். இது தொடர்பாக ஏதேனும் அறிகுறி தென்பட்டால் கட்டாயம் மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ளுங்கள்” என பெண்களுக்கு அறிவுறுத்திய வரலட்சுமி, புற்றுநோய் என்பது குணப்படுத்தக் கூடிய ஒன்றுதான் எனவும் தெரிவித்தார்.
Also Read
-
“தமிழ்நாட்டின் சாபக்கேடு எச்.ராஜா” : அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு!
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!