Cinema
இந்தக் கூட்டணியாவது நடிகர் விக்ரமுக்கு வெற்றியைத் தருமா? - உறுதியான அடுத்த பட தகவல்!
கோமாளி படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி தயாரிப்பாளர் முதல் விநியோகிஸ்தர்கள் வரை அனைவருக்கும் லாபகரமான திரைப்படமாக அமைந்தது ‘கோமாளி’. காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே நடித்திருந்த இந்தப் படத்தில் யோகிபாபு, ஷாரா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.
90’ஸ் கிட்ஸின் பிடித்தமான பல விஷயங்களை திரட்டிக்கொடுத்த இந்த படத்திற்கு மக்களும் நல்ல வரவேற்பை கொடுத்தனர். படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியான தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநர் பிரதீப்புக்கு புது கார் ஒன்றும் பரிசாக வழங்கிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கவிருக்கும் இரண்டாவது படத்தையும் தயாரிக்க ஐசரி கணேஷ் முன்வந்துள்ளார். இந்த வெற்றிக்கூட்டணியில் ஹீரோவாக நடிக்க நடிகர் விக்ரம் ஒந்தமாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. குறுகிய காலத்தில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வேலைகளை விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விக்ரம் தற்போது 300 கோடி பட்ஜெட்டில் உருவாகிவரும் ‘மகாவீர் கர்ணா’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். வரலாற்றுத் திரைப்படமான அது தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
BB SEASON 9 : "ஒரு நாள் மேல தாங்க மாட்டாரு?" - Watermelon திவாகரை டார்கெட் செய்யும் சக போட்டியாளர்கள்!
-
"தலைமை நீதிபதி மீதான தாக்குதல் சமூகத்தின் ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறது" - முதலமைச்சர் கண்டனம் !
-
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நோக்கி செருப்பு வீச்சு... பின்னணியில் சனாதனம் - முழு விவரம் உள்ளே !
-
திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! : விவரம் உள்ளே!
-
ரூ.209.18 கோடியில் 20 சமூகநீதி விடுதிகள், 37 பள்ளிக் கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!