Cinema
ஃபோர்டுக்கும் ஃபெர்ராரிக்கும் அப்படி என்னதான் சண்டை? - வெளியானது ‘Ford V Ferrari’ படத்தின் 2-வது ட்ரைலர்!
உலகளவில் பிரபல கார் நிறுவனங்களான ஃபோர்ட் மற்றும் ஃபெராரி நிறுவனங்களுக்கு இடையில் நடந்த கார் பந்தய போரை மையமாக வைத்து உருவாகியுள்ள ஹாலிவுட் படம் ‘ஃபோர்ட் V ஃபெர்ராரி’. கார் ரேஸ் வரலாற்றில் 1966 ஆம் ஆண்டு நிகழ்ந்த லீ மேன்ஸ் என்ற உலகப் புகழ்பெற்ற பந்தயத்தை மையமாகக்கொண்டு 20th செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் ‘ஃபோர்ட் V ஃபெராரி’ என்ற படத்தை தயாரித்துள்ளது.
’லோகன்’ படத்தை இயக்கிய ஜேம்ஸ் மேன்கோல்டு, இப்படத்தையும் இயக்கியுள்ளார். ஃபோர்ட் நிறுவனம் ரேஸ் கார்களில் சிம்ம சொப்பனமாக விளங்கியபோது, தனது போட்டி நிறுவனமான ஃபெராரியை முந்தும் வகையில் ஒரு அதிவேக காரை தயார் செய்ய, கேரல் ஷெல்பி என்ற கார் வடிவமைப்பாளரையும் கென் மைல்ஸ் என்ற கார் பந்தய வீரரையும் நியமிக்கிறது.
கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில் ஃபெராரியை தோற்கடிக்க எவ்வளவு விலை கொடுக்கவேண்டுமானாலும் தயாராக இருந்தது ஃபோர்ட் நிறுவனம். கார் பந்தயத்தின் போக்கையே மாற்றிய 34ஆவது கிராண்ட் பிரிக்ஸ் போட்டிக்கு முன் நிகழ்ந்த இந்த வரலாற்று சம்பவம்தான் தற்போது ஆக்ஷன் பயோகிராஃபியாக தயாராகியுள்ளது.
கார் வடிவமைப்பாளராக மேட் டேமனும், கார் பந்தய வீரராக கிறிஸ்டியன் பேலும் நடித்துள்ளனர். நவம்பர் 15ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படத்திற்கு ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
20th செஞ்சுரி ஃபாக்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை வால்ட் டிஸ்னி நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் முதல் ட்ரைலர் கடந்த ஜுன் மாதம் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது ட்ரைலரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படங்களின் வரிசையில் இந்த படமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Also Read
-
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - பதில் சொல்லாத மோடி : முரசொலி!
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!