Cinema
மீண்டும் தொடங்கும் ‘மாநாடு’ - தயாரிப்பாளருடன் சமரசம் ஆனாரா சிம்பு?
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த படம் ‘மாநாடு’. அரசியலை மையமாகக் கொண்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதும் சிம்புவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
திடீரென மாநாடு படம் கைவிடப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். மேலும், மாநாடு படம் வெங்கட் பிரபுவின் இயக்கத்திலேயே வேறு நடிகர்களின் நடிப்பில் உருவாகும் என்றும், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
மாநாடு படம் கைவிடப்பட்டதால் சமீபத்தில் மகா மாநாடு என்ற படத்தை 125 கோடி செலவில் தயாரித்து 5 மொழிகளில் இயக்கி சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை தொடர்பு கொண்டு நடிகர் சிம்பு மாநாடு படத்தில் நடித்துக் கொடுப்பதாகவும் இதற்காக வருகிற 20ம் தேதி தாய்லாந்தில் இருந்து சிம்பு தமிழகம் திரும்புவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் பிறந்தநாளன்று சிம்பு வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
சென்னையில் எப்போது மழை நிற்கும்? : வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
-
”மாற்றுத்திறனாளிகளின் ஒளிமயமான வாழ்வுக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!