Cinema
"படிப்ப மட்டும் நம்ம கிட்ட இருந்து எடுத்துக்க முடியாது"- ஆதிக்கத்தை எதிர்த்து வாள்வீசும் அசுரன் ட்ரெய்லர்
வடசென்னை படத்திற்கு பிறகு வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ''அசுரன்''. பூமணி எழுதியுள்ள வெக்கை என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர், பசுபதி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ஆதிக்கத்தை எதிர்த்து வாள் வீசும் அசுரனாக நடித்து அசத்தியிருக்கிறார் தனுஷ்.
Also Read
-
“அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக ‘ஆவணங்கள்’ விளங்குகின்றன!” : அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் : கண்ணீரில் திரையுலகம்!
-
“தமிழ்நாட்டிற்கு மிகப்பழமையான கடல்சார் வரலாறுண்டு” : நீலப் பொருளாதார மாநாட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!