Cinema
நடிகர் சிம்புவுக்கு தடை: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு- பரபரப்புத் தகவல்கள்!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு, தொடர்ந்து சரியான படங்களை தேர்வு செய்து நடிக்காததால் தோல்வியைச் சந்தித்து வருகிறார். அவரது சர்ச்சை பேச்சுகளும், ஒழுங்கில்லாத செயல்பாடும் அவர் மீது திரையுலகில் கரும்புள்ளி ஏற்படக் காரணமாக அமைந்தன.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த மாநாடு படம் திடீரென கைவிடப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். இதனையடுத்து, மாநாடு படம் கைவிடப்பட்டதால் சமீபத்தில் மகா மாநாடு என்ற படத்தை தானே 125 கோடி செலவில் தயாரித்து 5 மொழிகளில் இயக்கி சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இது மட்டுமல்லாமல், ஞானவேல்ராஜா தயாரிக்கும் `மப்டி’ ரீமேக்கின் படப்பிடிப்பில் இருந்து இடையிலேயே வந்ததாகவும் ஒரு புகார் இருந்தது. இது குறித்து சமரசம் பேச அழைத்தபோது சிம்புவின் நண்பர்களோ, உறவினர்களோ சரியான பதிலளிக்காததால் கடுப்பின் உச்சத்துக்குச் சென்றார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.
இதையடுத்து தயாரிப்பாளர்களான சுரேஷ் காமாட்சி, மைக்கேல் ராயப்பன், ஞானவேல் ராஜா மற்றும் எஸ்கேப் ஆர்ட்ஸ் மதன் ஆகியோர் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் சிம்பு, தற்போது வெளிநாட்டில் உள்ளதால், அவர் நாடு திரும்பியதும் அவர் தரப்பு விளக்கம் கேட்கப்படும் என்றும், உரிய நஷ்ட ஈடு தராவிட்டால், அவரது படங்களுக்கு திரைத்துறை சங்கங்கள் ஒத்துழைக்க கூடாது என்றும் தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!