Cinema
திட்டமிட்டப்படி நாளை வெளியாகுமா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ : ரிலீஸ் ஆவதில் மீண்டும் சிக்கல்!
நடிகர் தனுஷ், கௌதம் வாசுதேவ் மேனனுடன் முதன்முறையாக இணைந்த படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்தப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இந்த படத்திலிருந்து பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், திரைப்படம் பல ஆண்டுகள் ரிலீசாகாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், ''எனை நோக்கி பாயும் தோட்டா'' படம் செப்டம்பர் 6ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த முறையாவது படம் சொன்ன தேதிக்கு வெளியாகுமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், ''எனை நோக்கி பாயும் தோட்டா'' திரைப்படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாகுபலி படத்தை வெளியிட்ட அர்கா நிறுவனம் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. அர்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இருந்து எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை நீக்க அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்கேப் ஆர்டிஸ்ட் முயன்று வருகிறது.
நாளைக்குள் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியுமா என்பது சந்தேகமே. எனவே ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் மீண்டும் தள்ளிபோவதற்கான வாய்ப்பு உள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது; தேவைப்பட்டால்...” : உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
-
பாரதிதாசன் விவகாரம் : “பொய் சொல்வதை அமைச்சர் வன்னி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்” - கோவி.செழியன் பதிலடி!
-
“தலைமை நீதிபதி அவமதிப்பு.. முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்” : வழக்கறிஞர் வில்சன் எம்.பி!
-
“கல்வி உதவித்தொகை வழங்க இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?” : த.வெ.க அரசுக்கு கனிமொழி எம்.பி கேள்வி!
-
“உரிய முறையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” : அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கடிதம்!