Cinema
விஜய்க்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி? : விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து அ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பிகில் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப்படம் தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில் அக்டோபர் 24ம் தேதியே திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்துக்குப் பிறகு விஜய் நடிக்க உள்ள அடுத்த அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விஜய் 64’ திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியானது. மேலும், விஜய் 64 திரைப்படம் 2020ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து கதையை கூறியுள்ளார். விஜய் சேதுபதிக்கு கதை பிடித்து சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஆனால், தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருவதால் இந்தப்படத்திற்கு தேதி ஒதுக்குவதில் சிரமம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் நிச்சயமாக நடிப்பதாக விஜய் சேதுபதி லோகேஷ் கனகராஜிடம் தெரிவித்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!
-
தமிழ்நாடு திறன் பதிவேடு (AI Powered TNSKILL Registry) ! : துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!
-
இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன?