Cinema
3D அனிமேஷனில் முழு நீள படமாக வருகிறது டாம் & ஜெர்ரி
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான கார்ட்டூன் நிகழ்ச்சிகளில் ஒன்று தி லயன் கிங். இதில் வரும் சிம்பா, டிமோன், பும்பா ஆகிய கதாபாத்திரங்கள் குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் 90s கிட்ஸ்களுக்கும் ரொம்பவே பிடித்ததாக அமைந்தது.
ஆகையால் இந்த நிகழ்ச்சியின் முழு நீள படமாக 3D அனிமேஷன் முறையில் உருவாக்கப்பட்டு சமீபத்தில் வெளியானது தி லயன் கிங். ஹாலிவுட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து வருகிறது.
இந்த நிலையில், 90களின் காலகட்டத்தில் அனைவரையும் பெரிதாக கவர்ந்த கார்ட்டூன்களில் ஒன்று டாம் அண்ட் ஜெர்ரி. இன்றளவும் டாம் அண்ட் ஜெர்ரிக்கு கதாபாத்திரங்களுக்கும் அதன் வீடியோக்களுக்கும் இருக்கும் மவுசு குறையவே இல்லை என்றே கூறமுடியும். அந்த அளவுக்கு உலகின் அனைத்து மக்களையும் ஆக்கிரமித்துள்ளது இந்த டாம் அண்ட் ஜெர்ரி.
தி லயன் கிங் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து 2D தொழில்நுட்பட்த்தில் வீடியோ வடிவில் மட்டுமே வெளியான டாம் அண்ட் ஜெர்ரி படம், தற்போது 3D அனிமேஷனில் முழு நீள படமாக எடுக்க ஹாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் நடிகைகளுடன் பாலிவுட் நடிகை பல்லவி ஷர்தாவும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.
Also Read
-
நடமாடும் மருத்துவ சேவை : இதிலும் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு!
-
”சிஎஸ்கே-வில் மீண்டும் ரெய்னா, பிராவோ, முரளி விஜய்... களைகட்டப்போகும் சேப்பாக்கம்” - முழு விவரம்!
-
“பழனிசாமி ஒரு நன்றிகெட்ட அரசியல்வாதி” : ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு!
-
“சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வாஷ்அவுட் ஆகும்” - எல்.கே. சுதீஷ் எம்.பி பேட்டி!
-
7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு.. அதிமுக ஆட்சி ஊழல் நாற்றம் எடுத்த ஆட்சி: முரசொலி கடும் தாக்கு!