Cinema
சிவகார்த்திகேயன் அடுத்த பட அப்டேட் : டைட்டில் டிசைன், ரிலீஸ் தேதி வெளியானது - கை கொடுக்குமா ‘ஹீரோ’ ?!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் ‘ஹீரோ’ திரைப்படத்தின் டைட்டில் டிசைன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 20ம் தேதி படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘ஹீரோ’. விஷால், சமந்தா ஆகியோரை வைத்து ‘இரும்புத்திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இப்படத்தை இயக்குகிறார்.
‘ஹீரோ’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் அர்ஜூன், பாலிவுட் நட்சத்திரம் அபய் தியோல், கல்யாணி பிரியதர்ஷன், இவானா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பொலிட்டிக்கல் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி ரூபன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படத்தின் டைட்டில் டிசைன் மற்றும் ரிலீஸ் தேதியை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.
அதன்படி, ‘ஹீரோ’ திரைப்படத்தின் டைட்டில் டிசைன் போஸ்டர் சற்றுமுன்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த டைட்டில் போஸ்டர் காமிக்ஸ் வடிவில் உள்ளது. டிசம்பர் 20ம் தேதி ‘ஹீரோ’ படத்தை வெளியிட இருப்பதாகவும் அறிவித்துள்ளது படக்குழு.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!