Cinema
அவதார் திரைப்படத்தின் வசூலை முறியடித்து no.1 ஆனது அவெஞ்சர்ஸ் ! : சூப்பர் ஹீரோஸ் ரசிகர்கள் கொண்டாட்டம்
அவெஞ்சர்ஸ் சீரிஸின் கடைசி படமான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் கடந்த ஏப்ரல் 26ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இந்தப் படம், உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும், அந்தந்த பிராந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த வயது வித்தியாசமும் இல்லாமல் ரசிக்கப்பட்டது. சர்வதேச அளவில் பிரம்மாண்ட வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது. திரையிட்ட இடங்களிலெல்லாம் வசூலை அள்ளிக் குவித்தது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்.
10 ஆண்டுகளுக்கு முன்பு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் படம் உலக அளவில் 2.788 பில்லியன் டாலர் வசூல் சாதனை படைத்தது. உலக வசூலில் நம்பர் ஒன் இடத்தை அவதார் திரைப்படம் தக்கவைத்திருந்தது. இந்நிலையில், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் அவதார் படத்தின் வசூல் சாதனை பின்னுக்கு தள்ளி உள்ளது. அவென்ஜர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் தற்போது வரை 2.789 பில்லியன் வசூல் செய்துள்ளது.
முன்னதாக, எண்ட்கேம் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை இணைத்து படத்தை மறுபடியும் ரீ ரிலீஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
நடிகை விஜயலட்சுமி வழக்கு : நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட சீமான்!
-
SIR என்ற அநீதிக்கு எதிராகத் தமிழ்நாடு ஒன்று திரண்டு போராடும்; வெல்லும் : அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை!
-
“காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலைக் கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்!” : சனாதன திமிருதனத்தை வெளிக்காட்டிய வழக்கறிஞர் ராகேஷ்!
-
போரால் அழிந்த காசாவை மீட்க 25 ஆண்டுகள் ஆகும் : ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!