Cinema
‘வா.. மோதிப்பாரு’ தெறிக்கவிடும் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ : மூன்றாவது பாடல் ‘தீ முகம்தான்..’ !
இந்தியில் அமிதாப் பச்சன், டாப்சி நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்த படம் ‘பிங்க்’. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கிறது ‘நேர்கொண்ட பார்வை’. இதில், வித்யா பாலன், ஷரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். நேர்கொண்ட பார்வை படம் வருகிற ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாக இருக்கிறது என தயாரிப்புக் குழு அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் படத்தின் 3வது சிங்கிள் பாடலான ‘தீ முகம்தான்’ இன்று மாலை வெளியானது. பாடலாசிரியர் பா.விஜயின் வரிகளில் யுவனின் இசையில் வெளியாகியிருக்கும் இந்த பாடல் அஜித் ரசிகர்களுக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும் வகையில் உள்ளது.
முன்னதாக, தீ முகம் தான் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதும் சமூக வலைதளத்தில் இது குறித்து அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதற்கிடையில், யுவனின் இசையில் பாடல் வெளியானதும் உற்சாகமடைந்த ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
Also Read
-
நீதித்துறை குறித்த அமித்ஷாவின் சர்ச்சை கருத்து.... பொங்கி எழுந்த 18 முன்னாள் நீதிபதிகள்... விவரம் என்ன ?
-
“மக்களுக்கான திட்டங்களை சீர்குலைக்கும் ஒன்றிய பாஜக அரசு!” : TOI நாளிதழுக்கு முதலமைச்சர் சிறப்பு கட்டுரை!
-
சென்னையில் நடைபெற்ற தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் : சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு !
-
“அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற முழு மூச்சுடன் பாடுபடுவேன்!” : சென்னையில் நீதியரசர் சுதர்சன் உறுதி!
-
எடப்பாடி பழனிசாமியின் மிரட்டல் எதிரொலி... ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்க முயன்ற அதிமுகவினர் !