Cinema
காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகாவிற்கு வாரண்ட் !
நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில், கடந்த 2014ம் ஆண்டு, ராடியன்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் கடன் காசோலை மூலம் வாங்கப்பட்டது. மேலும், 50 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் கடன் பெற்றுள்ளனர்.
இதற்காக சரத்குமார் தரப்பில் 7 காசோலைகள் வழங்கப்பட்டன. ஆனால், அந்த காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பி வந்தன. இதையடுத்து, சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோரக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு சைதாப்பேட்டை 3-வது விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆஜராகவில்லை. சரத்குமார், ராதிகா ஆகியோர் நேற்று ஆஜராகத நிலையில், இருவருக்கும், ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டர்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!