Cinema
கின்னஸ் சாதனை படைத்த இயக்குநரும் நடிகையுமான விஜய நிர்மலா காலமானார்!
250 படங்களுக்கு மேல் நடித்து 40 படங்களுக்கு மேல் இயக்கி சாதனை படைத்துள்ள விஜய நிர்மலா இன்று (ஜூன் 27) மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 73. ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது.
விஜய நிர்மலா மறைவால் தெலுங்கு திரையுலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது. தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த பலரும், சினிமா ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த படத்தில், குழந்தை நட்சத்திரமாக 7 வயதில் அறிமுகமான விஜய நிர்மலா தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 15 வயதில் 'பார்கவி நிலையம்' என்ற மலையாளப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
விஜயா புரொடக்ஷன் தயாரித்த 'எங்க வீட்டுப் பெண்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் விஜய நிர்மலா. அதைத் தொடர்ந்து 'பணமா பாசமா' படத்தில் நடித்தார். இப்படத்தின் 'எலந்தப் பழம்' பாடல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றார்.
மொத்தம் 44 படங்களை இயக்கிய விஜய நிர்மலா உலகிலேயே அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்தச் சாதனை 2002-ம் ஆண்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.
Also Read
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!
-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கும் பழனிசாமி: துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!
-
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : 13 பிரிவில் சுற்றுலா விருதுகள்!
-
“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!