Cinema
இளையராஜா - ஒரு தனிப்பெரும் ராகம்! (ரசிகர்களின் உரையாடல் : வீடியோ)
தமிழ் திரைப்பட இசையின் தனிப்பெரும் ஆளுமை இளையராஜா. 1,000 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்து சில தலைமுறைகளைத் தனது இசையால் வசப்படுத்தி வைத்திருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கு இன்று பிறந்தநாள்.
இளையராஜாவின் ஒவ்வொரு ரசிகருக்கும் அவரது பாடல்கள் ஒவ்வொரு அனுபவத்தைத் தருகின்றன. இளையராஜாவின் பாடல்களையே வாழ்வாகக் கொண்ட ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். இளையராஜா இன்றி ஒரு நாளும் நகராது அவர்களின் நாட்காட்டியில்.
இப்படி பல்லாயிரக்கணக்கான வெகுதீவிரமான ரசிகர்களின் ஆதர்சமான இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களின் உரையாடல் நிகழ்வொன்றை சாத்தியப்படுத்தியுள்ளது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி.
‘மெஹந்தி சர்க்கஸ்’ திரைப்படத்தின் இயக்குநர் சரவணன் ராஜேந்திரன், கவிஞர் - பாடலாசிரியர் மோகன் ராஜன், எழுத்தாளர் ஜி.ஆர்.சுரேந்தர்நாத், தீப்தா, சௌந்தர்யா, அரவிந்த் ஆகியோர் இளையராஜா பற்றியும், அவரது இசை பற்றியும் தங்களது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!