Cinema
பத்து நாள் ஷூட்தான் பாக்கி... `ஆதித்யா வர்மா’ பட அப்டேட்!
2017ல் தெலுங்கில் வெளியாகி ஹிட்டான படம் `அர்ஜூன் ரெட்டி’. படத்துக்கு கிடைத்த வரவேற்பால் மற்ற மொழிகளிலும் ரீமேக் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்தியில் ஷாஹித் கபூர், க்யாரா அத்வானி நடிக்க `கபீர் சிங்’ என்ற பெயரில் தயாராகிறது. அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்காவே இயக்குகிறார். தமிழில் ’வர்மா` எனப் பெயரில் எடுத்து கைவிடப்பட்டு தற்போது கிரீசாயா இயக்கத்தில் `ஆதித்யா வர்மா’வாக மீண்டும் உருவாகி வருகிறது. நடிகர் விக்ரமின் மகன் த்ரூவ் விக்ரம், பாலிவுட் நடிகை பனிடா சந்து, ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ரதன் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் சென்னை, மும்பையைத் தொடர்ந்து போர்சுகலில் நடந்துவருகிறது. அடுத்ததாக டேராடூனுக்கு நகர இருக்கிறது படக்குழு. படத்தின் பெரும்பாலான பகுதிகள் படமாக்கப்பட்டுவிட்டதாகவும், இன்னும் பத்து நாட்கள் படப்பிடிப்பே மீதம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. படத்தை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியிட திட்டமிட்டு வருகிறார் படத்தின் தயாரிப்பாளர்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!