Cinema
தங்க மங்கை கோமதிக்கு ரூ.5 லட்சம் பரிசளித்த விஜய்சேதுபதி!
கத்தார் நாட்டின் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார் தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து.
ஆசிய போட்டியில் தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்ததால் நாடு முழுவதும் உள்ள மக்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
கோமதி மாரிமுத்துவுக்கு தமிழக அரசு சார்பில் எவ்வித உதவியும், பாராட்டும், பரிசும் வழங்காத நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தங்க மங்கையின் சாதனையை பாராட்டி அவருக்கு 10 லட்ச ரூபாய் நிதி அளித்திருக்கிறார். மேலும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இயக்குநர் ஜனநாதனின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லாபம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய் சேதுபதி, ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை கோமதி மாரிமுத்துவை தொலைபேசியில் அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது சாதனையை ஊக்குவிக்கும் விதமாக அவருக்கு 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் சார்பில் விஜய் சேதுபதி வழங்கியுள்ளார்.
Also Read
-
ரேஷன் அரிசிக்கு பாலிஷ் போட்டு கொள்ளை அடிக்கும் தவெக அரசு.. இதுவா Dummy CM சொன்ன மாற்றம்?: உதயநிதி கேள்வி!
-
புதிய விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தை மறு ஆய்வு செய்க.. - ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் MP அவசர கடிதம்!
-
இவருக்கு பதில் இவர்... மாற்றுத்திறனாளிகளை புறக்கணிக்கும் விஜய்... தீபக் நாதன் கடும் கண்டனம்!
-
த.வெ.க வழங்குவது ஆட்சியா.. க்ரைம் த்ரில்லர் படமா? : கீதா ஜீவன் கடும் சாடல்!
-
“நிதி இல்லை என்று கைவிரிப்பது நிர்வாகத்தின் பதிலாகிவிடாது” ; அமைச்சர் ரமேஷ்-க்கு சேகர்பாபு பதிலடி!