Cinema
நடிகர் சங்க செயற்குழு கூட்டம் தொடங்கியது !
2015-ம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில், நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. பொதுவாக, நடிகர் சங்கத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நாசர் தலைமையிலான அணியின் பதவிக்காலம் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிந்தது.
ஆனால், நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகளை முடித்துவிட்டுத்தான் தேர்தல் குறித்த அறிவிப்பு இருக்கும் என எதிர்பாக்கப்பட்டது. அதன்படி, 6 மாத காலம் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அந்த அவகாசமும் முடிவடைந்த காரணத்தினால், ஜூன் மாதம் நடிகர் சங்கத்துக்குத் தேர்தல் நடத்த ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளனர்.
இந்தத் தேதியை முடிவு செய்வதற்கான, நடிகர் சங்கத்தின் கடைசி செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இக்கூட்டதில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், பொதுச்செயலாளர் விஷால் மற்றும் நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், எங்கு தேர்தல் நடத்தலாம் உள்ளிட்ட அனைத்தையுமே முடிவுசெய்து அறிவிக்கவுள்ளனர்.
இந்தத் தேர்தலில், நாசர் தலைமையிலான அணி மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த அணிக்குப் போட்டியாக, ராதாரவி தலைமையிலான அணி களமிறங்கவும் தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Also Read
-
2026 சட்டமன்றத் தேர்தல் நிறைவு! : தி.மு.க சார்பில் வென்ற வேட்பாளர்கள் விவரம் உள்ளே!
-
“நமக்கும் அவர்களுக்குமான வாக்கு வேறுபாடு என்பது 3.52% மட்டுமே!” : தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“பச்சைக் கொடிக்கும் பச்சைப்பூச்சிக்கும் வித்தியாசம் தெரியாமல்..!” : முரசொலி தலையங்கம்!
-
🔴LIVE : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026: வாக்கு எண்ணிக்கை - வெற்றி நிலவரம்!
-
“திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!