Cinema
விஜய்சேதுபதியுடன் ஸ்ருதிஹாசன் இணையும் ‘லாபம்’ பூஜையுடன் இன்று தொடக்கம்
இந்த வருடம் விஜய்சேதுபதிக்கு பேட்ட, சூப்பர் டீலக்ஸ் என இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது. சிந்துபாத், மாமனிதன், சைர நரசிம்மா ரெட்டி உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கிறது. கடந்த 2017ல் ஸ்ருதிஹாசனுக்கு சிங்கம் 3 படம் வெளியானது. அதன் பிறகு தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை.
இந்நிலையில் விஜய்சேதுபதியுடன் ஜோடியாக நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். இப்படத்துக்கு லாபம் என பெயரிட்டுள்ளனர். இப்படத்தை இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு ஆகிய படங்களை தந்த எஸ்.பி ஜனநாதன் இயக்குகிறார். ராம்ஜி ஓளிப்பதிவு மேற்கொள்ள, டி.இமான் இசையமைக்கிறார்.
இப்படத்தை விஜய்சேதுபதி புரொடக்ஷன் சார்பில் விஜய்சேதுபதியும், 7சிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. ஆரஞ்சுமிட்டாய், ஜூங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை பட வரிசையில் படங்களுக்குப் பிறகு, இந்தப் படத்தை தயாரிக்கிறார் விஜய்சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.
அதிரடி ஆக்ஷனுடன் சோசியல் மேசேஜ் சொல்லும் படமாக இது இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இன்று பூஜையுடன் ராஜபாளயத்தில் முதல்கட்ட படப்பிடிப்பை படக்குழு தொடங்கியது.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!