Cinema
தமிழ் திரை பிரபலங்கள் வாக்களிப்பு! (Photo Story)
தமிழகத்தில் நடைபெற்று வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய தமிழக திரை நட்சத்திரங்கள்
நடிகர் அஜித் குமார், சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் காலை 7 மணிக்கே சென்று வாக்களித்தார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார் நடிகர் விஜய்.
நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
நடிகர் த்ரிஷா தனது தாயாருடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தார்.
நடிகர் ரஜினிகாந்த், சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து தனது வாக்கை பதிவு செய்தார்.
இயக்குநர் அட்லி மற்றும் அவரது மனைவி நடிகர் ப்ரியாவும் வாக்களித்தனர்.
மூடர் கூடம் பட இயக்குநர் நவீன் தனது வாக்கை பதிவு செய்தார்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தனது வாக்கை செலுத்தினார் நடிகர் சிவகார்த்திகேயன்.
நடிகர் விஜய் சேதுபதி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
நடிகர் தனுஷ் தனது வாக்கை பதிவு செய்தார்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது மனைவி பாடகி சைந்தவியுடன் சென்று வாக்களித்தார்.
நடிகை மீனா வாக்களித்தார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னையில் வாக்களித்தார்.
நடிகர் சந்தானம் தனது வாக்கை பதிவிட்டார்.
நடிகர் விவேக் வாக்களித்தார்.
நடிகர் அருண் விஜய் தனது மனைவியுடன் சென்று வாக்களித்தார்.
Also Read
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!