Cinema
தெலுங்கு படத்தில் வில்லனாகும் விஜய் சேதுபதி
வித விதமான கெட்டப்புகள், கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் அதிக முனைப்புக் காட்டி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.தற்போது,மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் மெகா பட்ஜெட் படமான, ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படம் மூலம் தெலுங்கிலும் கால் பதித்திருக்கிறார்.
இந்நிலையில் இவர் மீண்டும் ஒரு தெலுங்குப் படத்தில் ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தப் படத்தை ‘ரங்கஸ்தலம்’ படத்தை இயக்கிய இயக்குநர் சுகுமாரின் அசோசியேட், புஜ்ஜி பாபு சனா இயக்குகிறாராம்.
அவர் கதை சொல்லிய விதம் பிடித்து விடவே, படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டாராம் விஜய் சேதுபதி. இதில் வைஷ்ணவ் தேஜ், மனீஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.மைத்ரி மூவி மேக்கர்ஸுடன் இணைந்து, சுகுமார் இதனை தயாரிக்கிறார்.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
RSS நிகழ்ச்சிகளுக்கு தடை? : தமிழ்நாட்டை பின்பற்ற தொடங்கிய கர்நாடகா - அமைச்சருக்கு மிரட்டல்!
-
பீகார் தேர்தல் : கட்சியிலிருந்து விலகும் மூத்த தலைவர்கள் - அதிர்ச்சியில் நிதிஷ்குமார்!
-
“மாம்பழ விவசாயிகள் நலனை உறுதி செய்ய வேண்டும்!” : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
நெருங்கும் வடகிழக்கு பருவமழை... சுகாதாரத்துறை ஏற்பாடுகள் என்ன? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : இந்து மகா சபை அமைப்பின் தலைவர் கைது!