Cinema
உச்ச நட்சத்திரத்துக்கு ஜோடியாகும் ரம்யா கிருஷ்ணன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்யா கிருஷ்ணன்.ரஜினி முன் குரலை உயர்த்திப் பேசும் வில்லியாக படையப்பாவில் மிரட்டிய இவர், கமல் மேல் காதல் கொள்பவராக பஞ்சதந்திரத்தில் நடித்திருந்தார்.பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களுக்குப் பிறகு, ராஜமாதா-வாக ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.
இவர் கடந்தவாரம் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் லீலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.இவர் தற்போது இந்தியாவின் உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இயக்குநர் தமிழ்வாணன் இயக்கத்தில், நடிகர்கள் அமிதாப் பச்சன், எஸ்.ஜே.சூர்யா இருவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் உயர்ந்த மனிதன். இதில் தான், அமிதாப்புக்கு ஜோடியாகிறாராம் ரம்யா கிருஷ்ணன்.
இதற்கு முன் 1998-ல் வெளியான ’பேடே மியான் சோட்டே மியான்’ என்ற படத்தில் அமிதாப் பச்சன் – ரம்யா கிருஷ்ணன் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!