Cinema
நடிகர் விஷால் படப்பிடிப்பில் காயம்;மருத்துவமனையில் அனுமதி
'அயோக்யா' படத்தைத் தொடர்ந்து, சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். தமன்னா நாயகியாக நடித்து வரும் இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு துருக்கி நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பைக் சண்டைக்காட்சி ஒன்றை சண்டை இயக்குநர் அன்பறிவு இயக்கத்தில் படமாக்கி வந்தார்கள். அப்போது பைக்கில் விஷால் சென்ற போது, நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.
உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளிக்கப்பட்டது. இடது கையிலும், காலிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.மேலும், சின்ன காயம் தானா மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வாரா அல்லது விஷால் இந்தியா திரும்புகிறாரா என்பது விரைவில் தெரியவரும்.
Also Read
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !
-
“இது ஆன்மிகம் அல்ல; கேடுகெட்ட அரசியல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
-
“மதுரை தொழில் நகரமாகவும் புகழ் பெறவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை இலட்சியம்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“தமிழ்நாட்டின் சாபக்கேடு எச்.ராஜா” : அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு!
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!